விட்டுவிட வேண்டும் புகைப் பழக்கம்

ஓர் வழிப்போக்கர்,
எதிரில் வரக் கண்டேன்;

நடந்து வந்தார் ஒரு காலால் அவர்,
உதவிக்கு கைத் தாங்கிகள் இரண்டு,
என் மனது வலித்தது;

விசாரித்தேன், ஏன் இப்படி?
கால் விரல் கருத்தது,
இரத்த ஓட்டம் இல்லை! என்றார்;

பீடி புகைப் பழக்கம்,
கால் விரல்களின் இரத்தக்
குழாய்ச் சுருக்கம்; விரல் அழுகியது!!

இரத்த அணுக்கள்
உறைந்ததால் கால் விரல்களில்
இரத்தக் குழாய் அடைப்பு;

நோயின் பெயர்: Thrombo Angitis Obliterans (TAO)

மெத்தனம்,
பரவியது அழுகல்,
முழங்காலுக்கு மேல் கால் துண்டிப்பு;

விட்டுவிட வேண்டும் புகைப் பழக்கம்,
வேண்டும் கைத் தாங்கிகள் இரண்டு - அதோடு
வேண்டும் வாழ தன்னம்பிக் (கால்) கை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Mar-16, 5:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 105

மேலே