அசைவுகள் பேசும் காதல் மொழி 555

அசைவுகள் பேசும் காதல் மொழி 555

என்னவளே...

காதல் என்றால் என்ன எப்படி
உணர்வது என்கிறாயடி...

முகம்பார்த்து வரும் காதலை
சொல்ல தெரியவில்லையடி...

உள்ளம் பார்த்து வரும் காதலுக்கு
உதடுகள் தேவை இல்லையடி...

கண்களும் கைகளும் பேசிக்கொள்ளும்
மொழிதானடி காதல்...

நீ தலை உயர்த்தாமல் என்னிடம் பேசும்
ஒவ்வொரு நிமிடமும் ஏங்குகிறேனடி...

அலைபாயும் உன் கண்களை
ஒருமுறை பார்க்க...

நீ என்னிடம் உதடுகளால்
பேசுவதைவிட...

உன் கைகளின் அசைவுகளாலே
பேசும் மொழிதானடி அதிகம்...

நம் சைகைமொழிகளில் உள்ளதடி
நம் உள்ளத்தின் காதல்...

உண்மை காதல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Mar-16, 8:21 pm)
பார்வை : 136

மேலே