பட்டாம் பூச்சிகள்

பட்டாம் பூச்சியின்
காடுகளில்
புல்வெளி கதவுகள்...
-----------------------------------------------------
சட்டென எழுந்து பறந்தது
பட்டாம் பூச்சியின் கனவுக்குள்
அமர்ந்தவன் நகர்கிறான்...
-----------------------------------------------------
நள்ளிரவில் தட தடக்கும்
பட்டாம் பூச்சிக்கு
ரயிலின் ஞாபகம்...
------------------------------------------------------
பட்டாம் பூச்சி வண்ணத்துப்
பூச்சியானது...நீ
பார்த்த பார்வைக்கு புது எண்ணம்...
-------------------------------------------------------
சீக்கிரம் வரைந்து முடி
பறக்க வேண்டும்
பட்டாம் பூச்சி....
------------------------------------------------------
கொடியில் காயும் உன்னாடைகளின்
நுட்ப நுனிகளில் இருந்தே
பிறக்கின்றன பட்டாம் பூச்சிகள்...
----------------------------------------------------------
பட்டாம் பூச்சிகளின்
மறு சிறகடிப்பில் இனி
உன் தியரி....
---------------------------------------------------------
பைத்தியம் பிடித்த
பட்டாம் பூச்சிக்கு
உன் மாநிறம் ஆசை...
---------------------------------------------------------
ஜன்னலில் வந்தமரும்
பட்டாம் பூச்சி
அசையும் ஹோலி....
---------------------------------------------------------
ஒரு சிமிட்டல் இரு பார்வை
பட்டாம் பூச்சிக்கு
உன் சாயல்...
--------------------------------------------------------
உதிர்த்து போன பின்
நிறமல்ல அது
பட்டாம் பூச்சி நினைவு...
--------------------------------------------------------
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்