காதல் கூட்டணி - குமார்

பெண்ணே
காதல் எனும் தேர்தலில்
என்னோடு கூட்டணிக்கு வா
உனக்கு குடும்ப நலத்துறை
அமைசர் பதவி தருகின்றேன்

வேண்டாம் என்றால்
துணை முதலமைச்சர் வேட்பாளராகக்கூட
ஏற்கின்றேன்
நீ தனித்து மட்டும்
நின்றுவிடாதே
எனைத் தவிக்கவிட்டுச்
சென்றுவிடாதே

என்னோடு சேர்ந்தால்
ஈரைந்து மாதத்தில்
குழந்தை பிறக்கும்
நம் வாழ்வு சிறக்கும்

எனைவிட்டுப் பிரிந்தால்
ஈரைந்து மணித்துளியில்
என்னுயிர் இறக்கும்
மண்ணுக்குள் இருக்கும்

உன் மனப்பழம் கனியட்டும்
என் முகம் மனப்பாடம் ஆகட்டும்

உன் மனக்குழப்பம் முடியட்டும்
நமக்கு நல்வாழ்வு விடியட்டும்
என்னோடு கூட்டணி சேர் ...

எழுதியவர் : குமார் (27-Mar-16, 2:07 pm)
பார்வை : 160

மேலே