யாதுமாகி நின்றாள்

நடமாடும் பூவே ;
வாசனை மொட்டே - உன்
பாதச்சுவடுகள் படாத இடமெல்லாம் -
பாலைவனமாய் தவிக்கிறதே !

பெண்ணடிமை பேச்சிகூட -
பொய்யாபோச்சி !
போகப்பொருளாய் பார்த்த காலம் -
போயேபோச்சு !

தீட்டு என்று திரைமறைவில்-
வாழ்ந்ததுவும் உண்டு !
தீக்கொளுந்தாய் எழுந்துவிட்டாய் -
தீமை கண்டு இன்று !

வீட்டை விட்டு வெளியில் வந்தால் ;
விமர்சனப்பேச்சி !
விண்வெளியில் கால்பதித்தாய் ;
வீரமங்கை ஆச்சு !

ஆணவத்தில் இருந்த ஆணை -
அடங்கவைத்து விட்டாய் !
ஆச்சி அதிகாரத்தையும் -
அன்பில் பணிய வைத்தாய் !

உருவத்திலே மாற்றம் என்ற -
மாயை போக்க வைத்தாய் !
உள்ளத்திலே மாற்றம் வேண்டி -
உண்மை விளங்க வைத்தாய் !

பெண் என்ற சொல்லுக்கும்-
பெருமை சேர்த்துவிட்டாய் !
பெண்ணாக பிறப்பதையே -
பெருமை என்று நினைத்தாய் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (28-Mar-16, 12:54 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 239

மேலே