கேசரியின் சுவை

இன்று அம்மாவின் பிறந்த நாள்,
சுவையான கேசரி - தித்திப்பு,
நாவும் மனமும் இனித்தது,
என் அம்மா செய்தது!
கேசரியின் சுவை
அதன் ஆரஞ்சு நிறத்திலா,
அதிலுள்ள முந்திரிப் பருப்பிலா,
எது காரணம்!
இல்லை இல்லை,
என் அம்மா செய்ததால்
நாவும் மனமும் இனித்தது,
அம்மாவின் கைமணம் அப்படி!