பறக்கும் பட்டமாக ஆசை

வானத்தில் வீசும்
ஆடிக் காற்றில் வட்டமடித்துப்
பறக்கும் பட்டமாக ஆசை;

ஆரஞ்சு வண்ண ஆடை உடுத்திய
மேக தேவதையின் பார்வையில்
பறக்கும் பட்டமாக ஆசை;

ஆடித்திரியும் குயில்களின் பாடல்
கேட்டு உல்லாசமாக வானில் சுற்றி
பறக்கும் பட்டமாக ஆசை;

வானமென்னும் மகுடத்தில் தோன்றும்
வானவில்லின் வர்ணஜாலம் கண்டு களிப்புடன்
பறக்கும் பட்டமாக ஆசை;

வானத்தில் ஏறி சந்திர மண்டல
வாசலைத் தொட்டு புதுப்புது உயரத்தில்
பறக்கும் பட்டமாக ஆசை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-16, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 732

மேலே