அவள் கேட்டாள்
அவள் கேட்டாள்!
கேக் கிற்கும் லேக் கிற்கும்
என்ன வித்தியாசம் என்று;
சி யும், எல் லும் தான்
என்று சொன்னேன் நான்;
இல்லை இல்லை!
கேக் கில் கிரீம் இருக்கும்,
லேக் கில் தண்ணீர் இருக்கும்;
கேக் கில் செர்ரி பழம் இருக்கும்,
லேக் கில் மீன்கள் இருக்கும்;
இதுகூடத் தெரியாதா உங்களுக்கு - கேட்டாள்
மூன்றாம் வகுப்பில் படிக்கும் நிவேதிதா.