யாதுமாகி நின்றாள்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண் என்பவள்
தம் வீட்டின் பெண்ணாய்
மட்டும் பிறக்க வில்லை
பொன்னாய் உம்
பிறந்திருக்கிறாள்!!
வைரத்தின் சிறப்பை
அறியாதவர்கள்
அதன் மதிப்பையும்
அறியார்கள்!!!
அதுபோல் தான்
முற்காலங்கள்
கடந்து போயின !!!
இனிவரும் காலம்
பெண்ணின்றி இயங்காது !!!
பெண்ணின்றி கல்வியும் !
பெண்ணின்றி வேலையும்!
பெண்ணின்றி இல்லறமும்!
பெண்ணின்றி ஆதரவும் !
பெண்ணின்றி பெருமையும்!
இப் பூவுலகில் இனி
பிறக்க சாத்தியமில்லை !!!
என்னும் நிலை வந்து விட்டது!!!!
பெரியார் கண்ட
பெண்ணுரிமை இன்று
கேட்காமலே
கிடைத்து விட்டது !!!
பெரியார்கண்ட
பெண்ணுரிமை, சொத்துரிமை,
அரசுப்பணி, பெண்கல்வி
இவை அனைத்தும்
நிறைந்த நாடாக
நம் நாடு திகழ்வது
பெரியார் போன்ற
பெரியோர் களால் தான்
சாத்தியமாயிற்று!!!
பெண்ணே இன்று
பேரின்பமாய்!
குடும்ப விளக்காய் !
குல தெய்வமாய்!
கருணையின் தீபமாய்!
நாட்டின் கண்களாய்!
வீட்டின் தூண்களாய்!
வெளியுலகின்
எதிர் காலமாய் !
யாதுமாகி நிற்பவள் பெண்ணே !!!