நேற்றைய பெண்களிடம் யாரும் புகார் தெரிவிப்பது இல்லை ஆனால் இன்றைய பெண்கள் நாளைய பெண்கள் அவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும்
முன்னுரை;
நேற்று. , இன்று. , நாளை., இந்த மூன்று காலத்திலும் பெண்கள் மீது கூறப்படும் புகாருக்கான காரணங்களையும் அவற்றின் சூழ்நிலைகளையும்.,பெண்கள் புகாரை எதிர்கொண்ட விதத்தையும் மேலும் இனி வரும் காலங்களில் பெண்கள் நிலை எப்படி இருக்க வேண்டும் எனவும் இக்கட்டுரையில் காண்போம்.
பொருளுரை;
"நேற்றைய பெண்களிடம் புகார் இல்லை. "
இந்த கூற்றிலே எனக்கு உடன்பாடில்லை. நாம் கடவுளாக வணங்கும் அந்த "ராமரே"தன் மனைவியான "சீதை"யை பிறர் கூறிய புகாருக்கு தானே செந்தீயில் இறங்கச் செய்தார்.
ஏன். ? அவருக்கு என்ன தன் மனைவி மீது நம்பிக்கை இல்லையா. ..இல்லை அன்பு தான் இல்லையா. .
அனைத்தும் உண்டு. ஆனாலும் அவரின் செயலுக்கான காரணம் "அரசகடமை" ஆகிறது.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில்..,
பல வருடங்களுக்கு முந்தைய பெண்களிடமும் புகார் இருந்தது.
பல நாட்களுக்கு முந்தைய பெண்களிடமும் புகார் இருந்தது.
கடந்த வார பெண்களிடமும் புகார் இருந்தது.
நேற்றைய பெண்களிடமும் புகார் இருந்தது.
ஆனால் இவர்கள் அனைவரும் தங்களிடம் ஒருங்கே அமைந்த
"அன்பு. , கருணை., சகிப்புத்தன்மை. , விட்டுக்கொடுத்து வாழ்தல் "
போன்ற நல்ல குணங்களால் தங்கள் மீது வைத்த புகாரை வென்றனர்.
(இந்த அனைத்து குணங்களும் ஆண்களுக்கும் உண்டு. ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே இந்த குணங்கள் அதிகம் )
ஆனால் இன்றைய பெண்களிடம் இத்தகைய குணங்கள் இருப்பதாக தெரியவில்லை. காரணம். , அவர்களிடம் இத்தகைய குணங்கள் இருந்திருந்தால் நம் நாட்டிலுள்ள நீதி துறையில் "விவாகரத்து " எனும் பிரிவே இருந்திருக்காது.
நேற்றைய பெண்களிடமும் இன்றைய பெண்களிடமும் ஏன் இத்தகைய பெரிய கலாச்சார வேறுபாடு. .? ஏன் இத்தகைய புகார்கள் இன்றைய பெண்களிடம். .?
வாழ்க்கை சூழல் ஒரு முக்கியமான காரணம். நேற்றைய பெண்களுக்கு சமுகத்தில் இரவு வேலையில் உலாவ தைரியம் எங்கிருந்தும் தரப்படவில்லை. இரவு வேலையில் வெளியே செல்வது தவறு. .எனும் கருத்துக்கு உட்பட்டு அவர்கள் வளர்ந்தார்கள்.ஆனால் இன்றைய பெண்கள் இதர்க்கு நேர்-எதிர்மறையான வாழ்க்கை சூழலில் வளர்ந்தவர்கள். இவர்களுக்கு இருக்கும் தைரியமும் தன்நம்பிக்கையும் சில வேலைகளில் ஆண்களையும்., குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும் எதிர்த்து பேச வைக்கிறது.
அப்படி என்றால் ஒரு பெண் எப்போதும் ஒரு ஆணை எதிர்த்து பேச கூடாதா.? பெண்கள் எப்போதும் ஆண்களின் அடிமையாக..? என்ற கேள்வி இங்கே எழுப்பபடுகிறது.
நிச்சயமாக இல்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணின் அன்பிற்க்கே அடிமையாகிறான். அடாவடித்தனத்திற்க்கு அல்ல. பெண்களும் அப்படியே. , ஓர் ஆணின் அன்பிற்க்கே அடிமையாகிறாள்.இங்கே அடாவடித்தனம் நுழையும் போது தான் சிக்கல் ஆரம்பம்.
இதுவே இன்றைய பெண்கள் மீது கூறப்படும் புகாருக்கான முக்கிய காரணம்.
நேற்றைய பெண்கள் வளர்ந்த சூழலில். ...சுற்றி உறவுகள் அதிகம். ...அப்பெண்ணானவள் குழந்தையாக இருக்கும் போதே கண்டிப்புடன் வளர்ந்திருப்பாள்.காரணம் தன் உறவுகள் அனைத்தும் தன்னை சுற்றியே உள்ளது. தன் உறவுகளை கண்டு சிறுவயது முதல் தன் பாரம்பரியத்தை உணர்ந்திருப்பாள்.
ஆனால் இன்றைய பெண்கள் வளர்ந்த சூழலோ இதர்க்கு நேர் -எதிர்மறை.இவர்கள் வளர்ந்த சூழலில் உறவுகளே கிடையாது. கிடையாது என்றால் ., ஓர் புறம் உறவுகள் ஓர் புறம் இவர்கள். காரணம் தனிப்பட்ட ஒரு மனிதரின் பொருளாதார நெருக்கடி.
பரவலாக பரவியது "தனிக்குடித்தனம் "எனும் கலாச்சாரம்
இச்சூழலில் வளர்ந்த பெண்களுக்கும் அதேபோல் எல்லாம் கிடைத்தது தாயின் மூலமாக.
.ஆனால் இவர்களுக்கு உறவுகளை பற்றி தெரியவில்லை.
தாயின் மூலமாக இவர்கள் பெற்ற கண்டிப்பும் ...பாரம்பரியமும் இவர்கள் பெற்ற "கல்வி "மூலம் மூட்டை கட்டப்பட்டுவிட்டது.
ஏனெனில் இவர்கள் பெற்றது "அதீத கல்வி ".
இதுவரை எந்த ஒரு தலைமுறை பெண்களுக்கும் இந்த அளவு கல்வி வசதி வாய்ப்பை பெறவில்லை.
ஆனால் அதுவே இவர்கள் மேல் வைக்கப்படும் புகாருக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது.
இந்த அதீத கல்வியால் இவர்கள் பெரும் செல்வாக்கும் பணமும். , மேலை நாட்டு கலாச்சார மோகமும் இவர்களை தான் "ஒரு பெண் " என மறக்கச்செய்கிறது. இதுவும் இவர்கள் மேல் வைக்கப்படும் புகாருக்கு காரணம் ஆகிறது.
கல்விச்செருக்கு.., செல்வம். , செல்வாக்கு. , இவைகளால் ஏற்பட்ட மூடுதிரையானது பெண்களுக்கே உரித்தான அந்த நல்ல குணங்களை மறைத்துவிட்டது.அதை உறவுகளும் விலக்க மறந்து போய் விட்டனர்.
இந்த நிலையில் இருந்து தப்பிய எந்த ஒரு பெண்ணின் மீதும்
"புகார் "வர வாய்ப்பில்லை
முடிவுவரை ;
முதலில் இன்றைய பெண்கள் மீது கூறப்படும் புகாரை தவிக்க வேண்டும் எனில் முதலில் அவர்கள் தான் பெண் என உணர வேண்டும். நம் கலாசாரத்தையும் ., பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டின் பாரம்பரியத்தை அறிய வேண்டும்.
எல்லா பெண்களிடமும் பெண்களுக்கு உண்டான நல்ல குணங்கள் உண்டு. அதை தங்களுக்குள் சுய ஆலோசனை செய்து கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவது நல்லது.
நாளைய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது. ..இன்றைய பெண்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் தான் நாளைய பெண்களுக்கு ஆங்காங்கே ஒட்டி கொண்டிருக்கும் நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கற்றுத்தர வேண்டும். அவ்வாறு நடந்தால் நாளைய பெண்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். .....!