தொடரும் நினைவில் தொலையாத நாட்கள்

படரும் கொடியினைப்போல் நட்பாலே பிணைந்திருந்து
இடரும் வழிகள்கூட இனிக்கும் வழிகளாக்கி
அடர் நட்பாலே கழிந்த நாட்களவை
தொடரும் நினைவினிலே தொலையாத நாட்களே...

கண்ணீர் வருமென்றால் சிரிக்கும் சிரிப்பிற்கே
பன்னீர் வாசத்தை கொடுத்த‌தந்த நேசமே
செந்நீரை கண்களிலே வரவழைக்கும் நாட்களவை
தொடரும் நினைவினிலே தொலையாத நாட்களே...

ஆலமர விழுதில் ஆடிய பொழுதுகளில்
விழுதுவிட்டு விழுதுமாறி குரங்காட்டம் தாவிடுவோம்
நான்விழும்முன் நீவிழுந்து எனையுன்மேல் தாங்கினாயே
தொடரும் நினைவினிலே தொலையாத நாட்களே...

மழைபெய்த மறுநாளில் மரம்மீது கல்லெறிவோம்
புதுமழையை நம்வீது அக்கணமே விழவைப்போம்
கல்விழுந்து எந்தலைய பதம்பாத்து போகையிலே
எனக்குமுன் நீயழுத என்வலிய நீயுணர்ந்த...

உன்உடைய நீகிழிச்சு எந்தலையில் கட்டுமிட்டு
மேல்விழுந்த கல்லெடுத்து உந்தலையில் குத்திக்கிட்ட‌
கட்டுப்போட்டு ரெண்டுபேரும் ஊரெல்லாம் சுத்தினமே
தொடரும் நினைவினிலே தொலையாத நாட்களே...

ரெண்டுபேரும் பிரிஞ்சுயிப்போ பலவருஷம் ஆயிடுச்சு
வெளிநாட்டில் நீயிருக்க எல்லையிலே நானிருக்கேன்
தொடரும் நினைவினியே நானெழுதும் கவிதையிலே
தொலையாத நாட்களைத்தான் பத்திரமா வச்சிருக்கேன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Mar-16, 10:55 pm)
பார்வை : 1819

சிறந்த கவிதைகள்

மேலே