தமிழும் தமிழனும்

தமிழும் ., தமிழனும்.
இது எப்படி பட்ட உறவு. ?
ஒரு தாய்க்கும் கருவில் இருக்கும் சிசுவிற்க்கும் ஆற்றல் பரிமாற்றம் செய்யும் "தொப்புள் கொடி"போன்ற உறவு.
ஒரு தாயானவள் எப்படி தன் "கர்ப்பத்தில் "உள்ள சிசுவிற்க்கு ஆற்றலை தொப்புள் கொடி மூலம் தருகிறாளோ..
அதுபோல. ...,
நம் முன்னோர்கள் தாம் கற்ற அனுபவ அறிவையும் கண்டறிந்த கலைச்செல்வத்தையும் நம் மொழி மூலமே நமக்கு விட்டுச்சென்றுள்ளனர்.

இப்போது தான் சில ஆய்வுகளில் நம் மொழி" சுமார் " 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது. என்கிறார்கள்.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் தோன்ற மூலகாரணம் நம் தமிழ் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால். ., உலகில் வாழ்ந்த எல்லா இன மக்களுக்கும் நம் தமிழ் மொழியே தொப்புள் கொடியாக விளங்கி இருக்கும்.
மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்தனர். நம் தமிழை கொண்டாடினர். நம் முன்னோர்கள்.

ஆனால் இன்றைய நிலை...? ???
தமிழன் என்றால் வையத்தில் எங்கும் இழி நிலை தான். , பாரத தேசம் உட்பட..காரணம். ,

நம் இயலாமை. நம்மை நாமே சுய ஆலோசனை செய்ய கூட நம்மால் இயலவில்லை.

இங்கே "ராணி மங்கம்மாள் " மறைவிற்கு பிறகு தமிழர்கள் கிட்டத்தட்ட நாம் அனைவரும் இன்று வரை அடிமையாக தான் வாழ்கிறோம்.

இடை இடையே சில தமிழ் மறவர்கள் தோன்றினாலும் அவர்களுக்கு உதவி செய்ய எவரும் முன்வரவில்லை.
ஏன். ? சுயநலம். ..

உதவி செய்தால் தமக்கும் அதே நிலை தான் என்பதால்.

பரவாயில்லை. , போகட்டும் கெடுதல் செய்யாமல் இருக்கலாம் அல்லவா. ? அதுவும் இல்லை.

இந்த இரு குணங்களுமே இன்று வரை நம்மை வளரவும் நம் அடிமை விலங்கை உடைக்க தடையாக இருக்கிறது.

நாம் வளர்ந்தால் தான் நம் மொழி வளரும். நாம் சுதந்திரம் பெற்றால் தான் நம் மொழி சுதந்திரம் அடையும்.

அப்படி என்றால் நம் மொழி இன்னும் சுதந்திரம் பெறவில்லை. ? இன்னும் வளரவில்லை. .?

நிச்சயமாக இல்லை.

நம் மொழி சுதந்திரம் பெற்றிருந்தால் இன்னும் நாம் ஆங்கிலத்தில் பேச அல்லாடி கொண்டிருக்கமாட்டோம்.

நம் மொழி வளர்ச்சி அடைந்திருந்தால் இந்நேரம் உலக பொது மொழியாக நம் மொழி அறிவிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் என்னற்ற தமிழர்கள் வியத்தகு வளர்ச்சியையும் சுதந்திரமும் பெற்று உலகெங்கும் பரவி உள்ளனர். .இதை என்னவென்று கூறுவது.?

இவர்களின் வளர்ச்சி தனிப்பட்ட ஒரு மனிதனின் வளர்ச்சி. பணம் மட்டுமே இத்தகைய வளர்ச்சியை நிர்ணயம் செய்கிறது.

ஆனால் தன் தாய் மொழிக்கு இவர்களால் ஒரு உபயோகமும் இல்லை. இவர்களுக்கும் தன் தாய் மொழியின் உபயோகம் சிறிதும் இருக்காது.

பின் எப்படி தமிழின் வளர்ச்சி மற்றும் சுதந்திரம் இவற்றை காண முடியும். ?

இதர்கான விடைகளை நாம் தேடுவதர்க்கு முன் நாம் ஆங்கிலம் எப்படி உலக பொது மொழியாக உருபெற்றது நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

கிழக்கு இந்திய கம்பெனி(ஆங்கிலேயர்கள் )இந்தியா முழுவதும் ஏன் உலகெங்கும் தன் பொருட்களை விற்பனை செய்யத்தான் தன் தேசத்தில் இருந்தது புறப்பட்டார்கள்.அவர்களுக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. ஆனால் அவர்களின் பொருட்களுக்கு உலகெங்கும் "மோகம் " அதிகமாக வளர வளர.. பிற நாட்டு மக்கள் வியாபார தொடர்புக்கு வேண்டி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டனர்.
ஆனால் அவர்கள் பிற மொழிகளை கற்றுக்கொள்ள வில்லை
இதன் காரணமாகவே ஆங்கிலம் உலக பொது மொழியாக உருபெற்றது.

மொழிப்பற்றும் இனப்பற்றும்...ஒட்டிப்பிறந்த இரட்டை போல.. இவை ஒட்டித்தான் பிறக்கும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று பிறந்தால் போதும். .மற்றொன்று தானாக பிறக்கும்.

தற்போது இங்கே இந்த 2-ல் ஒன்று கூட இருப்பதாக தெரியவில்லை. நம் மீனவருக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த ஒரு உழவனும் சரி ..தரி நெய்பவரும் சரி...உழைப்பாளியும் சரி. ..வருவதில்லை. .இதே நிலை தான் எல்லோருக்கும்.

ஆனாலும் இங்கே அனைவரும் தமிழர்களாம்...?. !

இவ்வாறு நடப்பதால் நமக்குள் இருக்கும் இனப்பற்றை தொலைத்துவிட்டோம்.
பின் எங்கே மொழி பற்று உறுபெருவது...?

இதில் மாற்றம் கண்டால் இவ்வையத்தில் ஆளில்லா தீவில் கூட ஆர்பரிக்கும் நம் தமிழ் மொழி.

வாழும் தமிழ் மொழியே நீ
வையம் தனில் ஆர்பரிக்க -என் வாழ்த்துக்கள். ...!

எழுதியவர் : மோகன்சிவா (31-Mar-16, 6:26 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 2177

மேலே