நடமாடும் தெய்வமே

அம்மாபோல பேசும் தெய்வம் அகிலத்தில இல்லைங்க..
கரந்தபாலைக் காட்டிலும் அவ மனசு சுத்த வெள்ளைங்க..
கஸ்டங்களை இஸ்டப்பட்டு தாங்குவா..அவ
உசுருக்குள்ள என்ன வச்சி தூங்குவா..
தனக்கென ஆசைகளை மறந்தவ..அவ
எனக்கென தாயாக. பிறந்தவ.
உச்சி வெயில் சூட்டிலே...
குச்சி உடைப்பா காட்டிலே..
அச்சிவெல்லபேச்சிலே என்ன
வச்சா அவ மூச்சிலே..
ஒத்தையா இருந்து என்னை
முத்து போல காத்தவ.
பத்து மாதம் சுமந்து என்னை
பத்திரமாய் பார்த்தவ..
ஊண் ,உறக்கம் இல்லாம உழைச்சி தேஞ்சவ.
வான்நிலா போலவே தனிச்சி வாழ்ந்தவ..
பொம்பல சிங்கமா என் தாய் இருந்தா தங்கமா..
அன்புல அகிலபோல அகிலமெல்லாம்
எங்கம்மா.
வேர்த்தா விசிறிடுவா தூங்காம நான் படிக்க.
காத்தா வீசிடுவா என் உசுரு தான் துடிக்க..
தன்ன மறந்து என்னை காத்திடுவா
கண்ணபோல..
மண்ணில் உறவு எல்லாம் வந்தது
என் தாயினால..
வறுமை வலிஎல்லாம் அவ மனசுக்குள்ள புதைச்சி,
வளிமை கதைகளை எனக்குள்ளதான் விதைச்சி..
எளிமையை எனக்கு கத்துக்கொடுத்தவ இப்ப
முதுமையால் முடியாமல் படுத்தவ...

எழுதியவர் : கு.தமயந்தி (1-Apr-16, 2:01 pm)
சேர்த்தது : குதமயந்தி
Tanglish : nadamaadum theivame
பார்வை : 138

மேலே