தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 22 - = 56

கனகபிரியா உன்னுருவம் கண்டு கலக்கலானேனே – என்னை
காதல் கொள்ளும் உன்புருவம் கண்டு மிரசலானேனே….!

கவிதைபிரியா உன்கவிகளுக்கு நான் கிறுக்கியானேனே – என்னை
கவர்ந்திழுக்கும் நல்ல கவிதைகளாய் பொறுக்கித் தேர்ந்தேனே….!

எதுகை மோனை கலந்தபடி
எல்லோருக்கும் எளிதில் புரியும்படி
எளிய தமிழில் எழுதும்படி
என்னுள்ளம் எனக்கு சொல்லுதடி…!

புதுகவிதை என்னும் புதியமுறை
எதுகை மோனைக்கு எதிரியில்லை
எல்லாம் கலந்து எழுதும்போது
தன்னை மறந்த இன்ப நிலை…!


ஆகாயம் பூக்கும் வேளை
அன்னாந்துப் பார்த்தேன் வானை
ஒவ்வொரு விண்மீனிலும்
உன்னுருவம் கண்டேன் நானே..!

ஆகாரம் கொள்ளும்போதும்
ஒவ்வொரு பருக்கையிலும் நீயே
சேதாரம் ஏதுமின்றி
தேவாமுர்தம் ஆனாயே..!

பூவாசம் வீசும் சோலை
வண்டை பாசம் கொண்டதில்லை
ஆண் வாசம் கொண்ட - பூவை
சந்நியாசியான சரித்திரமில்லை..!

விடாது வீசும் கடலலை
பெறாது காற்றிடம் விடுதலை..
பிராடு கொடுக்கும் காதலை
ஏற்றால் நாம் தருதலை..!

என் ராசாத்தி உன் நெனப்பு…
என்னை ரசவாதம் பண்ணுதடி
இரா முழுதும் தூங்காம
என் கண்கள் பிடிவாதம் பிடிக்குதடி..!

என்னாசை ராணி தேனீ
காதல் வீணை மீட்கும் வாணி
விரைவில் கல்யாண ஏணி..
ஏறுவோம் கவலையேன் இனி..!

எழுதியவர் : சாய்மாறன் (1-Apr-16, 12:14 pm)
பார்வை : 78

மேலே