தன்னைவிட ஒருவனா

கட்டவிழ்த்த த்த காளை போல் திமறி னான்
கட்டுங்கடங்காமல் பேசினான் பொழுதுமே
சாடினான் யாவரையும் வரை முறையில்லாமல்
இகழ்ந்தான் அனைவரையும் திக்குத் தெரியாமல்

எதனால் இவ்வளவு என்று கண்ட போது
ஆத்திரம் என்று ஒரு சொல்லில் முடிக்கலாம்
அதுவன்றே குறிக்கோள் அதனிலும் மேலே
இயலாமை ஒன்று உள்ளடங்கியுள்ளும்


முடியவில்லையே தன்னால் எண்ணங்கள் திரள
கோபம் தலைக்கேற ஆங்காரமாக
வெடித்துச் சிதறுகிறான் மனம் குமறி
சினம் குறையை மறைக்கும் என்றாகுக.


தன்னைவிட ஒருவனா என்று ஒரு நினைப்பு
தலைகுப்பற அவனை புரட்டித் தள்ள
இறைகிறான் ஆவேசமாக காரணமே இல்லாது
தலை குனியும் நேரம் விரைவிலே எனறறியாமல்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (1-Apr-16, 11:30 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 343

மேலே