வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்

ஓய்வுபெற்றுச் செல்லும் எங்கள் ஆசிரியைக்காய்..

வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
எம் அன்னையே நீர் வாழவேண்டும்
பல்லாண்டு வாழவேண்டும் - என்றும்
பசுமையாய் வாழவேண்டும்

அறியாமை இருள் அகற்றி
எம் அகத்தினில் ஒளி ஏற்ற
ஆசிரியப்பணி செய்த - எம்
அன்னையே உமை வாழ்துகின்றோம்

பள்ளியிலே பண்பு காட்டி
அரவணைத்து அன்பு காட்டி
கடமையிலே தீரம் கொண்டு
வென்றுழைத்த அன்னையே - நீர்
பல்லாண்டு வாழ வேண்டும்
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்

பருவகால மாற்றமிங்கே – நீங்கள்
பள்ளி முடிந்து செல்கின்றீர்கள்
ஓய்வுக்காலமெல்லாம் ஒளிவீசி வீற்றிருக்க
உங்கள் பழைய மாணவர் நாம்
உளம் நிறைந்து வாழ்த்துகின்றோம்

உங்கள் சேவையிலே
எங்களுக்கு உருக்கொடுத்தீர்
ஏணியாய் நீரிருந்து
ஏற்றிவைத்து அழகு பார்த்தீர்
கைப்பிடித்து வழிகாட்டி
கல்விதனை போதித்தீர்
காலத்தை நாம் வெல்ல
காத்திருந்து கண்டுகொண்டீர்

கரம்கூப்பி வணங்குகின்றோம் - எம்
அன்னை உமை வாழ்த்துகின்றோம்
வசந்தங்கள் வீச வேண்டும் - உங்கள்
ஓய்வுக்காலம் சிறக்க வேண்டும்
இனிமைகள் சேர வேண்டும் - இன்று
போல் என்றும் நீர் வாழ வேண்டும்

ஆரோக்கியம் பெருக வேண்டும்
அமைதியும் படர வேண்டும்
புன்சிரிப்பும் தொடர வேண்டும்
புன்னகையும் பெருக வேண்டும்

அத்தனையும் சேர வேண்டும்
ஓய்வுக்காலம் சிறக்க வேண்டும்
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
எம் அன்னையே உமை வாழ்த்துகின்றோம் !

எழுதியவர் : சர்மிலா (1-Apr-16, 4:53 pm)
பார்வை : 212

மேலே