என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -15

மௌனப்பூட்டிட்டு உள்ளேதானே
உட்கார்ந்திருந்தேன் உள்ளெப்படி நுழைந்தாய்
சுவாசபாசை துணைகொண்டோ -1

குடிகாக்க முடிசூடி
குடிகெடுத்தும் குதூகலமாய் தொடர்கிறது
தமிழகத்தில் குடியாட்சி -2

தலைக்கு தோதீதென விலைபேசி
தலைசீவி வளர்க்கப்படுகின்றது
கொலையெனும் கலை -3

அபிரிதமானதன் ஆட்கொள்ளளினால்
ஆட்கொண்டு அந்தத்தில்
ஆளையே கொன்றது காதல் -4

காதலைத்தானே கசிந்துருகி
காதலாகி காதலித்தேன் இருந்துமேன்
சன்மானமாய் சாதல் -5

மொத்தஏரியில் அத்துமீறிய ஆக்கிரமிப்பை
ஒத்துக்கொள்ளாது பொத்துக்கொண்டு
புறப்பட்டதோ மழைவெள்ளம் -6


காவலாளி எனை
களவாணியாக்கினாய் பின்னங்கழுத்தில்
வெட்கப்பொக்கிசம் புதைத்து -7

உடலிளைக்க நடைநடக்கின்றாய் பூங்காவில்
வழக்கமாறாய் அதிகளவில்
மூச்சிறைக்கின்றன பூமரங்கள் ..-8

பச்சைதேநீர் பருகுகின்றாய்
தீர்த்தமாகிவிடுகின்றது குவளையில்
மிச்சமிருக்கும் எச்சில் தேநீர் -9

பச்சைதேநீர் பருகுகின்றாய்
சுற்றளவு சுருங்குகிறது
கைப்பிடியோடு குவளையும் -10

எழுதியவர் : ஆசை அஜீத் (1-Apr-16, 5:13 pm)
பார்வை : 237

மேலே