அழகு இழந்த காம்பு போல ஆனேன்

என்னை வெறுமையாக்கி
போனவளே
உனக்கு புரியாத
என் காதல்
நீ என்னோடு காதல் கொண்டபோது
உன் காதல் மயக்கத்தில்
நான் விழுந்தேன்
உன் அன்பு கொண்டு
என்னை வென்றதால்
உன் கனவையும் சேர்த்து
என்னில் சுமந்தேன்
இதனால் என் வாலிபமும்
அழகு கொண்டது
வாழ்கையில் சந்தோஷ
மலரும் வீசியது
பூவின் காம்பு போல
நான் இருக்க
பூ மட்டும் பிரிந்து போனதால்
அழகு இழந்த காம்பு
போல ஆனேனடி

எழுதியவர் : கலையடி அகிலன் (1-Apr-16, 4:28 pm)
பார்வை : 96

மேலே