தினம் ஒரு காதல் தாலாட்டு பாடல் - 57

தேன் தமிழ் பாடும் கனிமொழி
என்னை மொழிந்தது வழிமொழி
உன் இதழில் ஆடும் தேன்மொழி
என்னில் சொல்லுது பழமொழி
மூன்று தமிழ் கொண்ட செம்மொழி
முன்னேற்றம் கண்டது தனிவழி
ஈடு இணையில்லா தமிழ் மொழி
ஈராயிரம் ஆண்டு முதுமொழி..!

முல்லை மலரின் கொடியினம்
முகம் – அது அழகில் நிலவினம்
நீ தேனை கொடுக்கும் மலரினம்
நான் தேன் உறிஞ்சும் வண்டினம்..!

இலையில் படரும் பனியினம் - உன்
இடையின் வியர்வை நதியினம்
நீ உறவை தரும் உயிரிணம்
நான் உயிரை கொடுக்கும் தமிழினம்..!


முத்தம் கொடுக்கும் முகிலினம்
நித்தம் இச்சை மழையில் நனையனும்
நீ பூஜைக்கேத்த பூவினம்
நான் செய்யனும் உன்னை சாமி தரிசனம்!

சாமக் கோழியின் சப்தம்
உசுப்புது உயிர்களை நித்தம்
வைகறை பொழுதின் வசந்தம்
மண்ணில் தெளிக்குது சுகந்தம்

வாலை குமரிகள் எழுந்து
வாசல் தெளிக்கும் பொழுது
வளவிகள் கொஞ்சும் அழகு
எந்த இசை வகையும் சாராது..!

கோலமிடும் கோலமாவின்
பூர்வ ஜென்ம புண்ணியம்
அதன் பயனாய் வாசல்களில்
கோதையரின் மாக்கோலம்.!

மார்கழி திங்கள் வந்தால்
வாசல்களில் திருவிழா
முப்பெரும் தேவியரை வரவேற்கும்
வண்ணமிகு பெருவிழா..!

எழுதியவர் : சாய்மாறன் (2-Apr-16, 7:01 am)
பார்வை : 75

மேலே