மாறவில்லை
ழா..ழா..
என்று அது அழைத்தது
இதை..
ஊ..ஊ..
என்று வர மறுத்தது
இது..
அதன் கண்களில்
திரவமாக
வெளிப்பட..
இது
அதனோடு
போகத் துவங்கியது..
அது அவன் என்றும் ..
இது அவள் என்றும்..
அழைக்கப் பட்டனர்
அவர்கள் கூட்டத்தாரால் ..
பின்பு..
மனித குலத்தின்..
முதல் காதல் ..
அங்கே மலர்ந்ததும் ..
தொடங்கின ஆக்ரோஷமான
சண்டைகள்..
பின் ..
யார் பெரியவன் என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளவும் ..
இடங்களுக்காகவும் ..
சேர்த்து வைத்த
உணவு, பொருள் ..
இவைகளுக்காகவும் ..
இன்ன பிறவற்றிற்காகவும்
என்று
யுத்தங்கள் ..
பெருகிட ..
யுத்தமுறைகள் ..
போரிடும் தந்திரங்கள்
அவற்றிற்கான காரணங்கள் ..
மாறினாலும்..
மாறாவிட்டாலும் ..
மனிதன் ..
மாறவில்லை!