என்னோடு நான் இருப்பேன்

உன்னிலிருந்தோ..
வேறு எதனில் இருந்தோ
வேறு படுத்திடவும் ..

என்னை உன்னோடோ..
அல்லது வேறு ஒன்றுடனோ
ஒப்பிடுகையில்
தனிப்படுத்த பயன்படுவதும் ..

தவிர ..

நான் ..
என்று தனியாக
எதுவுமே இல்லை..

நான் ..
என்பது ஒன்றுமில்லை !

இந்த "நான்" ஐ ..
தனியாக
வேறுபடுத்தி பார்த்து
அழிப்பதற்கு
அவசியங்கள் எதுவும் இல்லை ..

இது புரியும் வரை
என்னோடு நான்
இருப்பேன் இறுதி வரை!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (2-Apr-16, 10:22 am)
Tanglish : ennodu naan irupen
பார்வை : 136

மேலே