இசை

இசை
₹₹₹₹₹₹₹

குழல்
என் உடையானது
காசின்றி

என் உடை
குழலானது
காசின்றி

ஆனால்
இரண்டிற்கும்
ஏனோ
வித்தியாசம்
ஏதும் புலப்படவே
இல்லை

குழலிசை முழங்கியது
செவியில்
ஆனால் ஏனோ எனக்கு தான் கேட்கவில்லை
பசி மயக்கமோ...
காது செவிடானதோ...

ஆனால் சொல்லியே
ஆகவேண்டும்
இவை தந்த
இசையில்
மயங்கி தான்
போனேன்
சாலையோரம்
நாதியற்று


இல்லாதவருக்கு உன்னால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள்

பணம் என்று
மட்டும் அர்த்தம் அல்ல...
அன்பு...
அன்னம்...
கல்வி...
உடை...
உறைவிடம்...
மருத்துவம்...
ஏதோ ஒன்று உன்(என்னையும் சேர்த்து தான்) சக்திக்கு முடிந்தது

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Apr-16, 2:51 pm)
Tanglish : isai
பார்வை : 75

மேலே