அலையும் அடங்கும்

அழகிய கடற்கரையோரம்,
நான் நடக்கையில், ஆர்ப்பரிக்கும்
அலையொன்று பாதம் பற்றியிழுக்க,
அப்பொழுது தான் உணர்ந்தேன்,
பாதச்சுவடு அழிக்கப்பட்டிருப்பதை,
மனம் அலையாய் அலைந்தது,
அலையை வெற்றிக் கொள்ள,
ஆட்டம் ஆரம்பித்தது,
நான் பதித்துக் கொண்டேயிருக்க,
அலையழித்துக் கொண்டேயிருக்க,
நான் சளைக்காமல் முயல,
அலை அசைவை மறந்தது,
பாதச்சுவட்டுக்குப் பாதகமில்லை,
ஆம்! என் முயற்சிக் கண்டு,
கடலலையும் தோல்வி அடைந்ததே

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (3-Apr-16, 2:44 pm)
பார்வை : 107

மேலே