வாக்கு உன் செல்வாக்கு
குடிசையில் வாழ்கிறேன் !
குபேரனும் வாசலில் நிற்க !
குனிந்து போய் பார்க்கிறேன் ;
குசலம் விசாரித்தான் !
துரத்தில் எரியும் விளக்கை காண்பித்து ;
துயரம் போக்க நான் இருக்கிறேன் !
இருண்ட வாழ்க்கை போதும் ;
இனியும் வேண்டாம் இந்த வாழ்க்கை !
கையை பிடித்தவன், கட்டிப்பிடித்து ;
கலக்கம் வேண்டாம், கவலை விடு !
நாளை ஆட்சி நமது என்றவன் -
நன்றாய் பார்த்துக்கொள் "நமது சின்னம்"!
தெருவெல்லாம் தேடினான் ;
தேர்தலை மனதில் வைத்து !
சிந்தனையில் நானும்-,"வந்தவர் யாரோ?"
சொந்தம் என்றான்,சோகத்தை பேசினான் !
வாக்கு மட்டுமே -என் செல்வாக்கு என்பதை-
தேர்தல் மட்டும் தெளிவை தந்தது !
வறுமை மட்டுமே புரியவைத்தது !
விற்ப்பனைக்கு அல்ல என் வாக்கு !