துணைவனே
உன்னுடனே தொடங்குகின்றன
ஒவ்வொரு விடியல்களும்...
உன்னுடனே தூங்குகின்றன
ஒவ்வொரு இரவுகளும்....!
நீயும் நானும்....
மொழியுடனே பேசுகிறோம்
மௌனங்களால் சண்டையிடுகிறோம்!
என் உறக்கம் தொலைத்த இரவுகளில்
நீயும்
உறங்காமல் விழித்திருக்கிறாய்...!
தலையணையும் ...
கண்களும் அறிந்த ரகசியத்தை
நீயும் மோப்பம்பிடித்துவிட்டாயே...!
இன்றுவரை ...
என் கண்ணீர் கதை கேட்டு
கசிந்துருகும் என் இன்னோர் உயிரே...!
வெறுமை தந்ததே
உன் துணையில்லா பயணங்கள்....!
துன்பம் கடந்து - நான்
துயில் கொள்ள -நீ
துணைவனாய் வேண்டும்
"இசைச்சாரலே...."
- கீதா பரமன்