தூரிகை
தூரிகை பேசும் மொழி ஓவியம்,
தூரிகையில் தோன்றும் பல காவியம்.
தூரிகை - மனிதனை ஓவியனாக்கும்
மகா சக்தி .
தூரிகை - வர்ணங்களை ருசிக்கும்
வாழ்க்கையைச் சமைக்கும் .
தூரிகை - கண்களை மயக்கி
மூளையைத் திறக்கும் .
தூரிகை - மனதை தூய்மைப் படுத்தும்
மாயத் துடைப்பம் .
தூரிகை - கற்பணையை ஆழப்படுத்தும்,
ஆழ்துளைக் கருவி .
தூரிகை - கோடி மொழிகள் கூரமுடியாததை
ஒரு துளியில் கூறிவிடும் ஞானி.
தூரிகை - இதன் முனையில் தோன்றுவது
ஓவியம் மட்டும் அல்ல வாழ்வியலும் தான் .
தூரிகை - இதைக் கண்டெடுத்தவன் கடவுள் அல்லன் அதற்கும் மேல் .