தேர்தல் கால ஹைக்கூ

சட்டபைக்கு தேர்தல்
கட்டை மேஜைகளுக்கு
தட்டலலிருந்து தற்காலிக ஓய்வு! 1

தேர்தல் திருவிழா
யாசக முதலைகள் வருகிறது
வீடுவீடாய் வாக்குகளை கவ்வ…! 2

பேரம் படியவில்லை
தாவியது தவளை
தண்ணீ காட்டிய அணிக்கு..! 3

திரும்பிய பக்கமெல்லாம்
திருந்தாத ஜென்மங்கள்
திக்குமுக்காடும் தேர்தல் களம் ! 4

வேலைகள் மும்முரம்
கும்பிடுகள் அபாரம்
தேர்தல் ஜீரம்! 5

தேர்தல் நேரம்
கண்காணிப்பு அதிகம்
திண்பண்டத்தில் பட்டுவாடா..! 6

2016 தேர்தலின்
சூப்பர் ஹிட் காமொடி
தமிழிசையின் 234 சரவெடி..! 7

கூட்டணிகள் மாற்றினாலும்
கொட்டாவிவிடும் கட்சிகளுக்கு
மாற்றான்தாய் மனப்பாண்மை..! 8

நாளை நாமளா..?
உதறலோடு உலா…
சொத்து குவிப்பு வழக்கு,,! 9

சொன்னது ஞாபகமில்லை
சொல்வதும் ஞாபகமிருப்பதிலை
மறதி மாப்பிள்ளைகள் – அரசியல்வாதிகள்..! 10

எழுதியவர் : சாய்மாறன் (4-Apr-16, 1:48 pm)
பார்வை : 233

மேலே