போற்றிடுவேன் எந்நாளும் கன்னியப்ப வாக்குஉன்செல் வாக்கு

அரசு உணவுப் பங்கீட்டுத் திட்டத்திற்கு
நெல்கொள் முதலும் போதவில்லை யென்றே
மாவட்ட ஆட்சியாளர் தவித்து பரிதவிக்க,
ஊரூராய் ஆட்சியாளர் படையும் வீடுவீடாய்

சோதிக்க, கேட்காமலே தான்தரவே வந்தாரே
மக்கள் துயர்துடைக்க, சோழன் உவந்த
சோழவந்தான் ஊரினிலே முதலியார் கோட்டை
மேலத் தெருவினிலே வாழ்ந்த செம்மல் கன்னியப்பர்!

அவர் பெயரோடு சேர்ந்ததுவே ‘கன்ட்ரோல்’
என்றவோர் இனிய நற்பெயர் புகழ்சொல்ல!
‘அரசு விலைக்கே அனைவர்க்கும் வாரி
வழங்கிய வள்ளல்; ஒருமூடைநெல் பத்துரூபாய்!

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கென - சொல்வேன்
அவர்பேர் விளங்கவே போற்றிடுவேன் எந்நாளும்
கன்னியப்ப! வாக்(கு)உன்செல் வாக்கு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-16, 10:03 am)
பார்வை : 100

மேலே