தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 23 = 61

தாமரை குளத்தில் பூக்கள் மலர்ந்து
தண்ணீர் இல்லாமலும் வாழுது...!
நல் பிருந்தா வனத்தில் காதல் மலர்ந்தும்
கண்ணீர் சுமந்து வாழுது...!”

என்னை சிந்திக்க வைத்தவனை
நான் சந்திக்க நினைப்பது தவறா...?
அவன் மேல் அன்பை வைக்காமலிருந்தால்
நான் துன்பப்படுவேனா ? சொல் !
நான் துன்பப்படுவேனா...?

என் எதிர்காலம் பற்றி கேட்டால்
நடந்ததை மறந்துவிடு என்கின்றது
நடந்தது என்ன வெறும் கனவா ?
நான் மறந்துப்போக துணைவா !
எளிதில் மறக்க முடியுமா ..!


உறவு சொல்லும் உறவுக்கு
ஆசையை தூது விட்டேன்
என்னாசை நாயகிக்கு
என்னையே அர்பணித்தேன்..!

நூற்றுக்கு பத்து வெற்றிப் பெற்று மணமேடை ஏறிடுச்சி
மீதியெல்லாம் தோல்வியுற்று வேறு கைமாறிடுச்சி !
சிலது உயிரை மாய்ச்சிடுச்சி..!

நிலையான வாழ்விற்கு வழிப்பல இருந்தும்
வாழ வழிவிட மறுக்கும் பாழும் ஜாதி மதம் !

தடைப்போடும் உறவுக்கு காதலின் ஆழம் தெரியாது
அதன் ஆழத்தை அது அறிந்திருந்தால் தடைப்போடாது

எழுதியவர் : சாய்மாறன் (4-Apr-16, 7:38 am)
பார்வை : 86

மேலே