சூழ்நிலைக்கேற்ற பாடல்-3

...........................................................................................................................................................................................

வண்ணப்பூ கொண்டு வந்தேன் அண்ணன் மகளே - என்
அண்ணன் மகளே..

வாடாத வாசப்பூவே என்றும் நீதானே - ஓ..
என்றும் நீதானே....!-----------------------------------------(வண்ணப்பூ)
....................................................................................................................
1.

அப்பனும் தோழனும் இணைந்தவன்
சிற்றப்பன் அல்லவா..

மனையாட்டி வருமுன் வந்த
மகளைக் கொஞ்சவா..

அண்ணி என்னும் அன்னை பெற்ற
அம்புலி அல்லவா..

என்னைக் கொள்ளும் கண்ணும் காதும்
அதிசயம் அல்லவா.. ------------------------------(வண்ணப்பூ)

2.

பகலில் மட்டும் ஆடும் தொட்டில்
என் கை அல்லவா..

பல்லியும் பாம்பும் கூட்டு சேர்ந்த
கதைதான் சொல்லவா..

தேங்காய் பன்னும் தேன்குழல் முறுக்கும்
வாங்கித் தந்திடவா..

தேர் போல் உன்னை தோளில் தூக்கி
தெருவலம் சென்றிடவா.. ------------------------------(வண்ணப்பூ)

3.

கண்டதை உடைக்கும் கடலே உன்னை
என்னிடம் ஒளிக்க வா..

காயம் படாமல் இருந்தால் போதும்
என்றே களிக்க வா..

தெரியாதென்று அண்ணன் கேட்டால்
பொய்தான் கூறவா..

விரியும் நகைக்கு சில்லறை கரையும்
விபத்தில் தேறவா... -----------------------(வண்ணப்பூ)

..........................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (4-Apr-16, 3:33 pm)
பார்வை : 99

மேலே