ஈசனைக் காண வேண்டும்
மேலுலகம் சென்று
ஈசனை நான் காண வேண்டும்,
காத்திருக்கப் போவதில்லை!
அம்பானி வீட்டில் ஐம்பது மாடிகள்,
எம்பெருமான் மாளிகையில் மாடிககள் எத்தனையோ?
ஏறி இறங்க மின்தூக்கிகள் எத்தனையோ?
நேருக்கு நேர் முகத்துக்கு முகம்
சந்திக்கும்போது என்ன செய்வார்
ஈசன்?
வருக வருகவென்று எழுந்து
வந்து இருகரம் கூப்பி
வரவேற்பாரா?
கட்டித் தழுவுவாரா,
கைபிடித்து அழைத்துச் செல்வாரா?
அமர ஆசனம் அளிப்பாரா?
சொர்க்கத்தில் இடமளிப்பாரா - இல்லை
நரகத்தில் தள்ளுவாரா?
நான் அறிய ஆவல்!
இன்றே சென்று
ஈசனை நான் காண வேண்டும்,
காத்திருக்கப் போவதில்லை!