மாய கனவு

சொர்க்கம் நோக்கி
என்னை மெல்ல
நடத்தி சென்ற
இறைவன்
சற்று அமர சொன்னான் !

ஏனென்று கேட்க
உன்னுடன்
இவ்வழி செல்ல
உன்னவளும் வருவாள்
அவளுடன் சேர்ந்து
செல்வோம் என்கிறான் !

காத்திருக்கும் வேளையில்
பொறுமையின் இலக்கணம்
உரைக்கின்றான் !

மணித்துளிகள் கரைய
பொறுமை இழந்து
கேட்கிறேன்
அவள் வருவாளா என்று !

சிரித்து கொண்டே
சற்று பொறுத்து கொள்
வந்து விடுவாள்
என்கிறான் இறைவன் !

மணித்துளிகள் கரைந்து
நாட்களாயின !

நாட்கள் கடந்து
மாதங்கள் ஆயின !

இனியாவது வருவாளா
என்று
உரக்க கேட்கிறேன் !

இதோ வந்து விட்டாள்
உன்னவள்
என்று கூறி செல்கிறான் !

நான் திரும்பி
பார்த்து
அதிர்ந்து போனேன் !

வந்ததோ
அவளுக்காய்
உயிரை விட்ட
என்னை போல்
இன்னொரு பைத்தியக்காரன் !!!

எழுதியவர் : தங்கதுரை (5-Apr-16, 5:02 pm)
Tanglish : maaya kanavu
பார்வை : 200

மேலே