வாக்கு உன் செல்வாக்கு- சந்தோஷ்

வாக்கு உன் செல்வாக்கு
தம்பி. கேளடா..
உன் வாக்கு
உன் ஜனநாயக செல்வாக்கு.

அரசியலா ஐய்யோ !
சாக்கடையென ஒதுங்காதே...!
வாக்கு விரலை நீட்டு
நல் நபரைத் தேர்ந்தெடுத்து தொடு..!

விதி.. தடைவிதி..!
ஊழல் பன்றிகள்
அரசியலில் ஊறுவதை தடைவிதி..
தொடு.. வாக்கு எந்திரத்தை தொடு.,.
கொடு.. நல் ஜனநாயகத்தை கொடு..

பிறகு பார்..
பாரில் வல்லராசகும் பார்
தேசம் வளரும் பார்..!
அரசியலெனும் ஜனநாயகநதி..!
புனிதமடையும் பார் !

ஒராயிரம் கேள்விகள்
ஒயாத போராட்டங்கள்
வெற்றுக் கோஷங்கள்
சத்தான எழுத்துக்கள்
எதுவுமே
நம் ஜனநாயகத்தை
பணநாயகக் கொடூரர்களிடமிருந்து
பாதுக்காத்திடாத
போதாத ஆயுதங்கள்..

உன் விரலிலுள்ளது தம்பி..
ஆயுதம்...!
நீட்டு.. மீட்டு..
தேசம் பெருமையடையும்
மகாத்மா சிரிப்பு நீடிக்கும்.

வெறும் வாயில்
புலம்பாதே..
நாளைய மன்னவனே..
அரசியல் சரியில்லையென
பொழுதும் வாயில்
மெல்லாதே..!

விரல் நீட்டு
கரம் கோர்த்து
மீட்டெடு..
நல்லதொரு ஜனநாயகம்....!

ஆம்
வாக்கு உன் செல்வாக்கு...!

**

- இரா.சந்தோஷ் குமார்


குறிப்பு : தினமணி - கவிதைமணி யில் வெளியான படைப்பு .

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (5-Apr-16, 5:07 pm)
பார்வை : 85

மேலே