கரடி

எண்ணையை வைத்து
குளியலுக்கு முன்
உணவு உண்டால்
அடுத்த ஜென்மம்
கரடி ஜென்மமாம்
பாட்டி சொன்னாள்.

பொதபொத உடம்பும்
பளபள முடியும்
கரகர சத்தமும்
கபகப வயிறும்

ஆடாது நடக்கும் நடையும்
அசையாது தின்னும் தீனியும்
வளையாது நிற்கும் முதுகும்
மாறாத உடல் பருமனும்

இப்போதே கரடிதானே!

எழுதியவர் : சுபாசுந்தர் (5-Apr-16, 7:42 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : karadi
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே