தரமாய் விருந்து

தரமாய் விருந்து!


கொத்தி கிளறி தின்னுகின்ற கோழியை
குழம்பாக்குகின்றோம்!
தத்தித்தாவும் அழகு முயல்களையே
தரமாய் விருந்தாக்குகின்றோம்

மடிநிறை பால்தரும் பசுக்களையே
வதைக்கின்றோம்!
துடிப்பாய் துள்ளியோடும் மான்களையே
துடிதுடிக்க கொல்லுகின்றோம்!

புல்லினை மேயும் ஆடுகளையே
பொங்கலிட்டு வெட்டுகின்றோம்
நல்சைவமான உயிரனங்களையே
நாமெல்லாம் உண்ணுகின்றோம்

அடர்காட்டிடை உயிரினங்களுக்கு
அஞ்சுகின்றோம் ! ஏன் ? ஏன்? ஏன்?
அசைவ உணவை அது உண்ணுவதாலா?
அது எதிர்த்தே நமைக் கொல்லுவதாலா?
-
--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (5-Apr-16, 8:07 pm)
பார்வை : 95

மேலே