இயந்திரமானேன்

பள்ளி பருவத்திலும்
கல்லூரி நாட்களிலும்
இருந்த உற்சாகம் இயல்பு
என் திறன் எங்கே போனது.

தொலைகாட்சி வீட்டிற்கு வந்தது
ஊமையாய் போனேன்
இமெயில் வந்தது உறவுகளுக்கு
தூரமாய் போனேன்
Watsapp ல் சென்றேன்
செவிடாய் போனேன்
Facebook ல் சேர்ந்தேன்
அக்கபோரில் சிக்கினேன்
Twitter ல் பதிந்தேன்
சண்டைக் காரனானேன்
Linkedin ல் பதிந்தேன்
தற்பெருமை பீற்றினேன்
Flipkart ல் சேர்ந்தேன் வீட்டிற்குள்
முடமாய் கிடந்தேன்
Amazon ல் புத்தகம் சேர்த்தேன்
கையசைவும் இல்லாமல் போனது.

மொத்தத்தில் கண்களும் கைகளும்
மட்டுமே இயங்கும் வெறும்
இயந்திரமாய் மாறிப்போனேன்.

எழுதியவர் : சுபாசுந்தர் (6-Apr-16, 10:19 am)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 360

மேலே