நகர்வலம்

நகர வீதிகளில்
விடியல் கருக்கலில்
மூன்று வருடமாய்
காலை நடையில்
கைத்தடி ஊன்றியபடி
எதிரில் வரும் முதியவரின்
முகந்தெரியா விட்டாலும்
புன்முறுவல் செய்வதை
உயரும் வலதுகை வணக்கம்
உணர்த்தும்..
மூன்று நாட்களாக
அவரது கைத்தடியோசைதான்
கடந்து செல்கிறது..
வழக்கமாய் உயர்கிறது
காலை வணக்கம்
சொல்ல எனது
வலது கை..