சாயல்

சின்ன வயதில்
நான் அம்மாவின் சாயல்
என்றுதான் நினைத்திருந்தேன்..
இப்போது ஐம்பதுகளில்
முண்டா பனியனிலும்
கொஞ்சம் தூக்கலான
வயிறுடன் குதிகால்
தெரிய உடுத்திய
வேட்டியை மடித்து
கட்டும் லாவகத்திலும்
நெற்றியின் எல்லைக்
கோடு பின்வாங்குவதிலும்
எல்லாவற்றையும் விட
எனக்கு எரிச்சலூட்டியிருந்த
சுற்றும் நடப்பதை
விசாரிக்கத் துவங்கிய
கரிசனத்திலும் அக்கறையிலும்
அப்பாவின் முத்திரைகள்
தெளியத் துவங்கியுள்ளன !

எழுதியவர் : ஜி ராஜன் (6-Apr-16, 10:17 am)
Tanglish : saayal
பார்வை : 51

மேலே