நேரம் என்றன் போது

நேரம் என்றன் போது
நினைவில் வந்தன்
ஒன்றல்ல பல
அடுக்கடுக்காக
எதை எழுதுவது
எதை விடுவது
என்று தோன்ற
பகலவன் தோன்றும் நேரம்
மனதில் எழ கொள்கிறேன்
நேரம் வந்து விட்டது
இயற்கையில் தொடங்கி
மனித வளத்தில் ஒடி
முடிவே இல்லாத
நேரத்தைக் கண்டேன்
யாவற்றிலும் ஒருங்கே.

நல்ல நேரம் கெ ட்ட நேரம்
என்னுடைய நேரம்
எல்லாமே நேரம் என்ற சலிப்பு
ஒரு பக்கம் கண்டேன்
அவற்றையும் தாண்டி
நோக்கினேன் நேரத்தை
மழையின் அழகிலே
நதியின் பிரவாகத்திலே
மலையின் உச்சியிலே
நிலாவின் குளுமையிலே
நேரம் கண் முன்னே நிற்க
விஞ்சியது நேரம்
தவறாமை என்ற கோட்பாடு
அதின் மின்னல் வேகம்
வயதுக்குள்ள பொலிவு.
அறிவு சார்ந்த வளர்ச்சி.


சொல்வேன் பன்மடங்கு
நேரம் நேரம் என்று ஓடும்
மாந்தர்களிடம் பல வகையிலே
பல்லாண்டு பல்லாண்டு
பாடி வாழ்த்தும் நாம்
சில நேரங்களில் பறக்கிறோம்
நேரமின்மை என்று நினைவுடன்
நேரம் நிறையவே இருக்க
ஏன் அதிகமாகவே
நேரம் பலவற்றில் தாக்க
காண்பதிலும் காணாததிலும்
நேரம் பல வழியிலே பரவ
புறத்திலும் அகத்திலும்
நேரம் இல்லை என்ற எண்ணம்
மாயை என்று உரைத்து
நிறைவுடன் வியப்படைகிறேன்
அன்று போது இன்றும்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-Apr-16, 3:57 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : neram enran bodhu
பார்வை : 1055

மேலே