தமிழுக்கு ஒரு வேண்டுகோள்

பல மொழி பயிற்சி பெற்று
பல பல தேசம் சென்று
நம் மொழி சிறப்பு பற்றி
பேசிடல் தானே நன்று...

பல தேச நூல்கள் கற்று
கலாச்சாரம் பண்பாடு அறிந்து
மேலான நம் தரத்தை பற்றி
உரைத்திடல் தானே நன்று...

வரலாற்று நூல்கள் மூலம்
உண்மைகள் தெரிந்து கொண்டு
உலகமே உணரும் வண்ணம்
செப்பிடல் தானே நன்று...

நமக்குள்ள நட்பில் மட்டும்
பேஸ்புக்கு வாட்ஸ் அப் மூலம்
நம் மொழி, வரலாறு பெரிதென‌
நாமே பேசி என்ன பயனோ???

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Apr-16, 1:46 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 564
மேலே