உன் நெஞ்சம் கல்நெஞ்சாக மாறியது எப்படி 555

பிரியமானவளே...

உன்னை எதார்த்தமாக
நான் பார்த்தேன்...

நீயோ என்னை
தலைசாய்த்து பார்த்தாய்...

உன் காதலை
என்னிடம் கண்களால் பேசி...

என் இதயத்தில் காதல்
கோட்டை கட்டியவளும் நீதான்...

ஒரு வார்த்தையில் எனக்கு
கல்லறை கட்டியவளும் நீதான்...

சாலையோரம் மலர்ந்த
மலர்களை பறித்து...

நீ வரும் பாதையில்
போட்டு வைத்தேன் அன்று...

நீயோ என் இதயத்திற்கு
மலர்வளையமே வைத்துவிட்டாய் இன்று...

பூவான உன் நெஞ்சம்
கல்நெஞ்சாக மாறியது எப்படி...

என்னை முழுவதும்
நீ மறக்க.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Apr-16, 8:38 pm)
பார்வை : 515

மேலே