யாரையும் ஏமாற்றி பழக்கமில்லை என்றாயடி 555

என்னுயிரே...
நீயும் நானும் ஜோடியாக சேர்ந்து
விளையாடிய நாட்களில்...
உன் கை பிடித்துக்கொள்ள
ஆசை என்றேன்...
கை நீட்டி
பிடித்துகொள் என்றாய்...
ஒரு முத்தம்கொடு என்றேன்
வாங்கிக்கோ என்று கொடுத்தாய்...
கன்னத்தை கிள்ளவா என்றேன்
கிள்ளிக்கோ என்றாய்...
ஒருமுறை உன்னை
அனைத்துக்கொள்ளவா என்றேன்...
நீயாக என்னை
இறுக்க அனைத்துக்கொண்டாய்...
நான் எது கேட்டாலும்
தருகிறாயே ஏன் என்றேன்...
எனக்கு உன்னை ஏமாற்ற
எண்ணம் வரவில்லை என்றாயடி...
ஏனோ அன்று நீ
கொடுத்த இதயத்திற்காக...
இன்று என் இதயத்தையும்
சேர்த்து எடுத்துகொண்டு...
என்னை ஏமாற்றி
விட்டாயடி நீ...
ஏனடி பெண்ணே.....