தீயில் கருகுதடி என் இதயம் மட்டும் 555
என்னுயிரே....
நீயும் நானும்
அறிமுகமானோம் கைபேசியில்...
என் தோழி உனக்கு
தோழியானதால்...
கை பேசியில் எனக்கு
உன் அன்பை தந்தாய்...
உயிரின் உணர்வுகளுடன் வாழ்ந்தேன்
உன் உருவம் இல்லாமல்...
மின்னஞ்சலில் உன்
புகைப்படம் பார்த்தேன்...
கற்பனையில் வளர்ந்த உருவத்திற்கு
உயிர் கொடுத்தாய்...
நேரில் காதல் என்னும்
மலர் நான் கொடுக்க...
நீ என் கண்முன்னே
கசக்கி எறிந்தாய்...
என் இதயம் மட்டும் தீயில் கருகும்
வலியை உணர்ந்தேன்...
உன்னை மறப்பேன் என்று
நிமிடம் கூட நினைக்காதே...
உன்னோடு சேர்ந்து
நான் வாழாத போதும்...
விழிகளில் பதிந்த
உன் உருவம்...
என் இதயத்தில் வளர்ந்த
உன்மீதான காதல்...
சேர்ந்து வாழ்ந்துவிடுவேனடி
இரண்டோடும்...
உன்னை மட்டும்
நினைத்து.....