உன் பார்வை
என் எண்ணம், செயல், நடவடிக்கை
ஆக மொத்தம்
எனக்கானது எல்லாமே
மிகச் சரியானது
சிறிது கூட அதில் குறைகள் இல்லை
என்றெண்ணும் அளவிற்கு
நீ என்னை பார்த்த முதல் பார்வை
என்னை என்னுள் பிரளயத்தை உண்டாக்கி
உன்னை நினைத்து நினைத்து
என்னை உருகச் செய்தது
ஆனால் பின்னொரு நாளில்
அது எனக்கான அன்பு பார்வை இல்லை
உன் பார்வை சாதாரணமானது
எனது எண்ணம்தான் தவறு
என்று என்னை உணரச் செய்தபோது
வெறுத்துப் போனது
வாழ்க்கை மட்டுமா???