உன்னைக் கானதுடிக்குதடி என் இதயம் 555
பிரியமானவளே...
சுவாசம் நீயாகவும் இதயம்
நானாகவும் இருந்தேன்...
நீ என்னோடு சேரமாட்டாய்
என்று தெரிந்த போது...
என் சுவாசம்கூட
சுமையானதடி எனக்கு...
என் விழிகளில்
உன் பிம்பம் இருந்தாலும்...
கண்கள் இல்லாத என் இதயம்
உன்னைக் கானதுடிக்குதடி...
தினம் தினம் உன் நினைவுகள்
என் இதயத்தை குத்தி...
என் விழிகளில் ரத்த கண்ணீர்
வரவைக்குதடி...
உனக்கென்ன நீ கல்லாக
மாறிவிட்டாய்...
உன்னைப்போல் நானும்
கல்லாக மாற தெரியாமல்...
உன்னை நினைத்து
தவிக்கிறேனடி.....