விற்பனை

தோ சௌ ருப்யா சார்
இருநூறு ரூபாய் என்று
இந்தியில் விலை சொன்னான்
அந்த நிஜத் தாஜ்மஹாலின்
நடைபாதையோரம்
பொம்மைத் தாஜ்மஹால்
விற்றுக் கொண்டிருந்த
ஆக்ரா நகரத்து பையன்..
வந்தவர் தென்னிந்தியரென ஊகித்து
மூணு நூறு ரூபா சார் என்றான்
மூன்று விரல்கள் காண்பித்து
கொச்சைத் தமிழில்..
முடிவில் முப்பது ரூபாய்க்கு
தாஜ்மஹாலை பேரம் பேசி
வாங்கிய நண்பர் நகர்ந்ததும்
ஹவ் நைஸ் என்று
பனியனும் அரைக்கால் சட்டை
போட்டிருந்த வெளிநாட்டு வெள்ளைக்கார
அம்மையார் கடை முன்
நின்றதும் சொன்னான்..
ஒன்லி தௌசண்டு இண்டியன் ருப்பீஸ்..

எழுதியவர் : ஜி ராஜன் (10-Apr-16, 4:12 pm)
Tanglish : virpanai
பார்வை : 108

மேலே