பெருமிதம்
லட்சிய வெற்றி அலட்சிய பார்வை
ஆஹா பெருமிதம்
அடித்ததில் கைகள் துவண்டன
ஆனாலும் பெருமிதம்
நின்றதில் கால்கள் கெஞ்சின
ஆனாலும் பெருமிதம்
கொடுத்த சவாலை முடித்ததில்
இன்னும் பெருமிதம்
முடியாது என்றதை முடித்ததில்
இன்னும் பெருமிதம்
பட்ட கறையை நீக்கியதில்
இன்னும் பெருமிதம்
அடித்து வெளுத்துப்போட்டதில்
இன்னும் இன்னும் பெருமிதம்
...................................................
...................................................
கையில் பிடித்த மட்டையை
தூக்கி பிடித்த வண்ணம்
அடக்க ஒண்ணா பெருமிதத்தோடு
கரையை அடைந்தான்
...............................................................
...................................................................
சலவை தொழிலாளி .