10 செகண்ட் கதைகள் - அனுபவம்
என் மகனுக்கு சைக்கிள் ஓட்டக்கற்றுகொடுக்கிறேன்; என்னையும் அறியாமல் என் தந்தையின் அறிவுரை (எனக்கு அவர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்த பொழுது)
என்னிடம் இருந்து வெளிப்பட்டது கண்டு எனக்குள்ளே மெய் சிலிர்த்தது: "நான் பின்னாடியே வர்றேன், புடிச்சுக்குறேன். நீ பாட்டுக்கு ஒட்டு, முன்னாடி மட்டும் தான் பார்க்கணும், திரும்பி பார்க்காம நான் இருக்கேன்னு நம்பி, தைரியமா ஒட்டுனா தான் கத்துக்க முடியும்பா.. நம்பிக்கை இல்லாம திரும்பி பார்த்தியினா கீழே தான் விழுவே, சரியா?"