எனக்காக பிறந்தவளா 19

Episode 19 : எனக்காக பிறந்தவளா ??

கீறல் விழுந்த இடத்தை தொடும்போது ரவியின் முகம்தான் தெரிந்தது . அவன் வீட்டை நெருங்க நெருங்க பயம் inch inch ஆக‌ கூடியது . இந்த bike ஒரு வகையில் ரவியின் உயிர், தூசி துரும்பு விழுந்தால் கூட அதை சுத்தம் செய்து வாரம் ஒருமுறை water wash monthly once servicenu எதோ ஒரு ஜீவன் மாறி பாத்துக்குவான் . இந்த problem ah solve பண்ண ஒரு அடி கண்ணத்தில் வாக்கி கொள்ளும் உறுதியில் ரவி வீட்டு கதவை " ரவி ரவி" என்று தட்டினான் .

" என்னடா Emergency work லாம் முடிச்சிடியா " ரவி .

" hm முடிச்சுட மச்சி , இந்தா key "

" ஏன்டா dull இருக்க ?"

" மச்சி வரும்போது விழுந்துட டா, bike கீறல் விழுந்துறுச்சு "

" உனக்கு இதனா ஆச்சடா " ரவி bikeகை பரிசோதனை செய்தவாறு கேட்கிறான் .

" இல்ல மச்சி bikeல தான் கீறல் விழுந்துறருச்சு,sorry டா "

" எய்! விடு நான் பாத்துக்குற , இன்னோறு தடவ வண்டி கிண்டினு கிண்டி பக்கம் வந்துடாத புரியுதா "

" நிஜமாதான் சொல்றியாட, நான் பயந்துனே வந்த அப்பா எப்பதா நிம்மதியா இருக்கு "

" சரி விடு விடு இதலாம் ஒரு matterரே இல்ல, bikeக நானே ரெடி பண்ணும்னுதான் இருந்த, next week stunt இருக்கு "

" ம் .. ஜாக்கிறதய பண்ணு டா"
" அதலாம் அசால்ட் பண்ணிடுவ மச்சி, நாளைக்கு பாக்கலாம் bye " என்று பைக்கை முறுக்கியவாறு வீட்டிற்க்குள் நுழைந்தான் .

ஆனால் ஒரு 300 ரூபாய் பணத்திற்க்கு த‌ன்னை எத்தனை தூரம் அலையவிட்டு தனியாக நிற்க வைத்தது எந்தவிததிலும் வசந்திற்கு நியாமாக தெரியவில்லை . மிகவும் தனிமையாக உணர்ந்த அந்த நொடி தன்னில் எத்தனை ஏமாற்றங்களை செய்துவிட்டது . இந்த நொடி அதை நினைக்கையில் நண்பர்கள் எல்லாரும் உலகில் உயர்ந்தவர்கள் ,காதலர்கள் அனைவரும் அடிமையாக்கப்பட்டவர்கள் .

தன்னை ஒரு அடிமை என்று நினைக்க தோனவில்லை காதலர்களில் ஆண் பெண் என்று தனி தனியாக அடிமைகள் கிடையாது இருவரும்மே காதலுக்கு அடிமையாக்கப்பட்டவர்கள் தான் நான் மைதிலி என்ற பெண்ணிற்க்கு அடிமை இல்லை காதல் என்ற காவியத்திற்க்கு அடிமை.

மைதிலியை மறக்க மறுக்கிறேன் என்றது காதல் இதயம் . தன்னை ஒரு ஒழுங்கு நிலைப்படுத்த முடியாமல் தவிப்பு இருந்ததை அவனால் உணர முடிந்தது . அந்த பெண் அதிதி தன்னை பார்த்து சிரித்த கேலி சிரிப்பிற்க்கு இதுவரை காரணம் தெரியவில்லை . அவள் கையை பிடிக்கும் போது கையில் எற்பட்ட மிருதுவான உணர்வு அசிங்கமானது ஆனால் அவள் அழகானவள் அவள் போல் ஒரு தோழி இருந்தால் அது கேத்தாக இருக்கும் ஒரு நாள் அதிதி உன்னையும் கவனித்துக்கொள்கிறேன் கேலி சிரிப்பு சிரிச்ச இல்ல .

அவன் செல் ஒலித்தது watsup msg screenனை உருட்டிபார்த்தான் .

"வசந்த் wat doin" 7:46 .
" am watching movie its nyc flim " 8:22
" Are you there" 9:30 .
" wat hapn " 9:31
" கடைசியாக ஒரு பாவமான பூனைக்குட்டியின் படத்தில் மேல் "sorry " என்று எழுதப்பட்டிருந்தது . வசந்த்திற்க்கு அந்த பூனைக்குட்டி பரிதாபத்தை துண்டியதை விட காதலை தான் அதிகமாக தூண்டியது போல் காட்டியது அவன் முகத்தில் இருந்த அந்த சிரிப்பு .

அவனுக்கு என்ன சொல்வது என்ன பேசுவது என்ற குழப்பம் இருந்த்தது .
" ம் சொல்லு மைதிலி "
" என்ன sir busy ah ? "
அவள் முதல்முறை இத்தனை msg இந்த மாறியெல்லாம் பேசியது அச்சிரியமாக இருந்தது தவறை உணர்ந்து இருக்கலாம் அவள் reply காற்றில் இத்தனை முறை அவன் செல்யை தொட்டு அவனை பலமுறை நனைத்துவிட்டது.

" அப்படிலாம் இல்ல உன் msg ah இப்பதான் பாத்த மைத்து அதா late "

" ம் ok வசந்த் . thanx tdy frndz கூட semaya enjoy பண்ண flim supera இருந்துச்சு thanx வசந்த் "

" ம் . . என்னையும் உங்க‌கூட கூப்டினு போவனு நினச்ச ப்ட் நீ என்ன தனியபவிட்டு போய்ட‌ "

" யேய்ய்ய்ய் ! எனக்கு அந்த idea வரல வசந்த் sorry dnt feel நம்ம தனிய போலம் ok வா "

நெஞ்சில் ஒரு தீ சட்டென்று பரவி ரொமங்களை பத்தவைத்தது .

" எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்ப போலாம் "

" ம் அத யோசிச்சுதான் சொல்லனும், நீ நல்ல boyதா ப்ட் நான் இவனையும் நம்பறது இல்ல "

" உனக்கு என்ன தவிற boys ல யாருன frndz இருக்காங்களா ?"

" இருக்காங்க ப்ட் உன்னமாறி யாரும் close இல்ல, உன்கிட்ட மட்டும்தா இப்படிலாம் பேசுவ வசந்த் "

"I love you , I can also feel that you are in luv with me but wen vil you express it? ? "

" இதொட .. அதலாம் இல்ல you are my best frnd "

" bt you are not ny frnd .. ஐ லவ் யூ மைதிலி ஐ லவ் யூ "

" ஒய்! என்ன நீ போசுக்கு போசுக்குனு லவ் சொல்ற அதலாம் முடியாது you are my frnd "

வசந்த் சில நிமிடங்கள் மெளனமாக இருந்தான் மீண்டும் வந்த msg-il .

" ஐ லவ் யூ my dear frnd, you are ny frnd my lovely frnd "
" ஐ லவ் யூனு சொன்னமட்டும் போது frndலாம் add பண்ணாத நான் உன்ன frnd ah பாக்கல you are my lovely lover, நீ என்ன லவ் பண்றிய இல்லயா ?? "

அவள் பதில் சொல்லவில்லை அவளின் பதிலுக்காக காத்திருந்தான் . 15 நிமிடங்கள் கழிந்தது இன்னும் அவளிடம் பதில் இல்லை, காதல் அவஸ்தை தவிப்பு இருந்தது, தான் பேசியதில் தவறு எதெனும் இருக்கலாம் என்று அவன் reply வை மூன்று முறை படித்தப்பின் அவன் மேல் அவனுக்கு கோவம் வந்தது . அவள் பதில் எதிர்பாராமல் அவன் திரையில் விழுந்தது .

" ஐ லவ் யூனு ஒரு வார்த்தை சொல்லிட அது காதலாகிடுமா வசந்த் ? சொல்லாம காதலிக்கிறவங்க எவ்ளோவோ பேர் உண்மைய இருக்காங்க . என்ன இதுவரைக்கும் யாரும் impress பண்ணது இல்ல ப்ட் நீ அப்படியில்ல நீ என்ன நிறைய impress பண்ணிட ஆனா என்னால ஐ லவ் யூனு சொல்ல முடியல‌ ப்ட் உன் லவ் trueனா உன் மைதிலி உனக்கு sure ah கிடைப்ப " .

இதை படித்தவுடன் சங்கீதம் நாலு திசையிலும் ஒலித்தது . அவள் ஐ லவ் யூனு சொல்லி இருந்தால் கூட இதுபோல் ஒரு உணர்வு இருந்து இருக்காது , அவள் காதலை தூண்டி விடவேண்டும், impress,நான் trueவ இருக்க உண்மைய இருந்து இருக்க அதா இதுவரைக்கும் யாரும் தொடமுடியாத அந்த அழகான இதயதை தொட்டு இருக்க , இன்னும் ஒன்னுதான் பண்ணனும் அதா impress. அவள என்னால மட்டும்தா impress பண்ணமுடியும் frist impression அவளுக்கு நான் தான் என்று வசந்திற்க்கு அவள் காதலின் உருவம் புதிதாக தெரிந்தது . கண்களில் புதிதாக ஒரு வெளிச்சம் பிறந்து நிலாவள் கண்ணருக்கில் வந்து காதலை முத்தங்களாக தருவது போல் ஒரு மயக்கமான பிரம்மை இன்பத்தை வாரி இதயத்தில் கொட்டியது .
" hm yes கண்டிப்ப கிடைப்ப because அவ எனக்காக பிறந்தவ "
திரையின் மேல் தளத்தில் புதிய எண் 8056774618 என்ற எண்ணில் இருந்து " வசந்த் you really looking so cute " . தொடரும் .. heart emoticon Nishanth

எழுதியவர் : kavi Tamil Nishanth (12-Apr-16, 3:04 am)
சேர்த்தது : நிஷாந்த்
பார்வை : 256

மேலே