எனக்காக பிறந்தவளா 18

Episode 18 : எனக்காக பிறந்தவளா ??

வசந்த கண்திறக்கிறான் காரின் டயர் சில CM தொலைவில் இருக்க, கார் Driver திடீன சில தவறான வார்த்தைகள் அவன் காதுகளில் விழவிலை . Bike-Ai நிமிர்த்தி, self start செய்தான் பொறுமையாக, bike ஒழுங்காக செல்ல மாயஜால் U வலைவை கடந்து மாயஜால் முன்புற சுவரில் அவளை இன்னோறு பெண்ணுடன் பார்த்தான் .

" வாங்க சார் இதா 10Mins ah "
"Traffic மைத்து என்று" சிரிப்பு கலந்த களைப்பில் சொன்னான் .
"வசந்த் இவ என் friend அதிதி, My best friend"
அந்த பெண் அழகாக இருந்தாள், அவளிடம் இதுவரை பார்த்திடாத ஒரு கலை அம்சம் அவளிடம் இருந்தது, அதனுடன் கவரகூடிய பார்வை, அந்த விழிகள் சில வினாடியில் ஒரு ஆண்னை ஆழமாக பாதிக்கும் என்பதில் வசந்திற்க்கும் சந்தேகம் இல்லை அதில் மைதிலிக்கும் ஆனால் வசந்தின் மனம் அதை எற்க்க மறுத்தது, மைதிலி மட்டும்தான் அவனுக்கு அழகு என்பதில் மனம் உறுதி இழக்காமல் இருந்தது . அவளை மறுமுறை பார்க்க கண்களுக்கு ஆசைதான், ஆனால் மைதிலி‍யின் சிரிப்பை தவற விட அவன் நெஞ்சம் விரும்பவில்லை . மைதிலி இந்த உயிரைக் காண‌தானே இந்த‌ சுவாசம் இதுவரை தொடர்ந்தது .

அந்த பெண் " Hai வசந்த் என்று கை நீட்டினாள் " . அவள் கை தொடுவதில் பட்டு இழழை தொடும் உணர்வு இருந்தது, இருந்தும் மனம் முள் ஒன்று பட்டதுபோல் வலி கொண்டது . காதலி இருக்கையில் இவளின் கைதொடுவதில், கண்பார்ப்பதில் தேவையற்ற அறிகமுகமாக வசந்த நினைத்தான் . அந்த பெண் மைதிலியின் காதுகளில் எதோ சொலலி இளித்தாள் . மைதிலியும் இளித்தாள் .

" என்ன மைதிலி என்ன ஆச்சு ?"
" இல்ல‌ வசந்த் நீ Smart ah இருக்கனு சொல்ற " .

வசந்த் அதுக்கு எதுக்கு டி இளிக்கிறிங்கனு கேக்க தோனியது . மைதிலி சிரிக்கிறாள் இது போதும் என்று தோனியது . மீண்டும் ஒரு முறை வேண்டுமானல் "ஓட்டி"க்கொள் கவலையில்லை என்று தோனியது அந்த விலையில்ல சிரிப்புக்கு .

" ok வசந்த் ஒரு 300 இருந்த தா வசந்த்,சினிமாக்கு போகனும், Time ஆகிடுச்சு நான் அப்பறம் தந்துடுற. வசந்த் தப்ப நினைச்சுக்காத please, புது job கிடச்சு 3 days அகுது இல்ல treat tharanum kaasu illa உன்ன அதா எடுத்துனு வர சொன்ன, சாரி " .

" இந்த 300 க்கு தா கூப்டியா மைதிலி "

வசந்த் தன்னிடம் இருந்த 3 நூறுபாய் தாள்களை நீட்டினான் .

" அவளதான மைதிலி " என்றான் . அவன் வலியோடு கேட்டதை மைதிலி உணரவில்லை . காசை வாங்கிகொண்டு " வசந்த் டைம் ஆகிடுச்சு நாங்க வரோம்ம் பை" என்றவள் சில நொடிகளில் மறைந்து போனது விந்தையாக இருந்தது . தனி ஒருவனாக நின்றுக்கொண்டிருந்த அவனுக்குள் ஏமாற்றம் வலிமையாக இருந்தது, bikeல் இருந்த சில உராய்வுகள் அவனை நறுக்கென்று பின்கழுத்தில் குத்தியது போல் வலித்தது . இந்த சம்பவதை வாழ்வில் கண்ட பெரிய ஏமாற்றமாக உணர்ந்தது தவறில்லை என்று அவன் நினைத்தான் . எதையும் தீர்மானமாக யோசிக்கும் கூர்மையில் அவன் இல்லை . கலக்கம், கவலை, ஏமாற்றம், பொருமை , காதல், கவனம், பயம், நிதானம், தோல்வி இத்தனையும் அவன் மூளையில் உயிர்பெற்று நின்றது .

"' பைக் கிறலை பார்த்தாள் நண்பன் திட்டுவானா ? "எப்படி சாமலிப்பது" ? இவளுக்கு என் என்னை கூட்டிச்சொல்ல தோனவில்லை ? அங்க அவ safe ah இருப்பாளா ? பசங்க யாருனா பிரச்சன பண்ண ? " அந்த ponuga என்னதான் பண்ணுவாங்க ", "வீட்டுக்கு போனவுடனே அவளுக்கு ஒரு கால் பண்ணனும்" , " பேசனும் " , கேக்கனும் ? , கொஞ்சமாவது திட்டனும் இல்ல romence ah பேச try பண்ணனும் ? அதுக்கு அவ set ஆகலன again friendly ah பேசிதா சமாலிக்கனும் , அவ மேல அப்படி ஒன்னும் தப்பு இல்ல , இல்ல நான் உண்மையா நேசிக்கறதாள அவ தப்பு பண்ணக்கூட easy ah விட்டுறேனா ? எல்லாம் காதல் செய்யும் மாயயா? நண்பன் ஓதைப்பானே "

கிண்டி ரவி வீட்டுக்கு அருகில் வந்துவிட்டான் . " அவன் காரணம் கேட்பானே என்ன சொல்றது " . To be continue ..

எழுதியவர் : kavi Tamil Nishanth (12-Apr-16, 3:01 am)
சேர்த்தது : நிஷாந்த்
பார்வை : 166

மேலே